Wednesday, April 30, 2008

T.Rajendar பாணியில் ஒரு காதல் கவிதை

உனை கண்டபோது முதல் முதலாய்
என் நெஞ்சில் காதல் கடல் அலை யாய்
நான் ஆனேன் கற்சிலையாய்
பிறகு நான் இல்லை நிலையாய்
என்றும் உன் நினைவாய்
உனை தொடர்ந்தேன் நிழலாய்
உடல் இளைத்தேன் துறும்பாய்
என் காதல் சொன்னேன் ஒரு வழியாய்

மலர்ந்தது உன் திருவாய்
எனை கண்டு புன்னகைத்தாய் குறும்பாய்
ஆலமரத்தின் அழகிய விழுதாய்
காதல் வளர்த்தோம் மெல்ல வளர்பிறையாய்
காலங்கள் கரைய மெழுகாய்
வீட்டில் காதல் சொன்னோம் கனிவாய்

அவர்கள்

முகம் சுளிக்க வெகுவாய்
பிறகு யோசிக்க மெதுவாய்
நாம்

உறுகினோம் தீ பட்ட மெழுகாய்
துடித்தோம் தீயில் விழுந்த புழுவாய்
சம்மதம் தந்தனர் அமிழ்தாய்
இதயம் ஆனது தேனில் விழுந்த பலாசுளையாய்
என்றும் வாழ்வோம் வா நிறைவாய்…..

Sunday, January 6, 2008

ஏமாற்றம்

என்னவளை கண்டு
ஏமாந்
து ண்டு
அவளை

பூச்செண்டெகொண்டு.....

Sunday, September 23, 2007

மறுபிறவி

மறுபிறவி
கிடைத்தா
ல்
எனக்
கு

புன்னகையாய்
பிறந்
து
மொழியாவேன்
உனக்
கு.....

Wednesday, September 19, 2007

கவிதை

உன்
விழியும்
என்
விரலும்
சேர
காலத்தால்
அழியா
காதல்
சின்னங்களாய்
பெற்றெடுத்த
செல்வங்கள்.....

Tuesday, September 11, 2007

விலகல்.

விளகத்தான்
விழைகின்றேன்
விளக முடியாமல்
விழுகிறேன் உன்
விழியீர்ப்பு
விசையில்
விளக்கில்
விழும்
விட்டில் பூச்சியாய்

நீ மட்டும் வாசிக்க.....

இமைகளுக்கிடையில்
இருந்து
நீ
எனை
இம்சிக்க,

உனை
நான்
சுவாசிக்க
என்
இதயக்குழியில்
நீ வசிக்க,


சூழ்நிலையோடு
சூழ்ச்சியும்
சூழ
நம் காதல்
கசக்க,


உனக்கு
தோழனானேன் நான்
மனம்
வலிக்க,


உனையன்றி வேறு
துணையில்லை
என் துயர்
உரைக்க,


இடுகாட்டுக்கு
ரையாவேன்
இரண்டு சொட்டு
இறைத்திடு
கண்ணீர்
உன் இரங்கல்
தெரிவிக்க,


காதலே
காதல்
கொள்ளுமடி
நம் காதல் மீது
தன் நிலை
சிறக்க.....

Sunday, September 9, 2007

விதி

உயிர்க்கொண்டு
வாழும் நாள்வரை
உன்
துணைகொண்டு
வாழ
ஏங்கிணேன்,
விதித்ததென்னவோ
மலர்கொண்டு
வைக்கத்தான்
உன்
கல்லறையில்.....

Wednesday, June 6, 2007

கடவுளாக்குவோம்.....

விடையறியாமல்
விசும்புதடி
விழிநீர்
விதைத்து
விலைமதிப்பற்ற
காதல்


விரைந்தோடிவா
விதியால்
விதவையாகும் முன்
விழுதாய் வளர்த்த
நம் காதலை
கடவுளாக்குவோம்
நாம்
கைகோர்த்து......

***காதல் பரிசு***

எனை
பிரிந்து
வேறொருவனை
நீ
மனமுவந்ததாய்
மணக்க,
காதல்
மருந்தெனக்கு
உன்
திருமண
விருந்து.......

Friday, May 4, 2007

*** தொடரும் என் காதல்***

சம்மதம் எனக்கு
மரணித்து
மீண்டும்
ஜனித்து
அடக்கம்வரை
நடக்க
காதல்
கைப்பிடித்து
அவள்
மழலையாய்.....

Wednesday, May 2, 2007

***தினம் ஒரு கவிதை***

அறியாதவளாய்
கேட்கிறாய்
தினம்
ஒரு
கவிதைக்கு
காரணம்

நாளுக்கொன்றாய்
புது
பரிணாமததில்
தோன்றுவது
நீயென்பதறியாமல்.....

Tuesday, April 24, 2007

அசைபோடுகிறேன்.....

அசைபோடுகிறேன்.....
இதயத்தை
அபகரித்த நீயும்
உனில்
அகப்பட்ட நானும்
நெஞ்சில்
காதலை
விதைத்த
நாள் முதல்
சிதைபட்ட
நாள் வரையிலான
சையாச்சொத்தாம்
நினைவுகளை
உன்
நினைவு
எழ
மௌனமாய்
நெஞ்சுக்குள்
நான் அழ
இதயத்துள்
உன் புன்னகை
சொற்பொழிவு
என்
மூலாதாரமே,
தராசு முள்ளாய்
துடிக்குதடி
இதயம்

Sunday, April 22, 2007

ஒரு மௌனத்தின் மொழிபெயர்ப்பு......

அருமை காதலியே
இதய வார்ப்பே
இயங்கு சக்தியே
காதல்
நினைவெனை
கொல்ல
என் உருக்கத்தை
யாரிடம் சொல்ல
எனக்காக அல்ல
காதல் கொண்ட
துயர் தள்ள

மதம் கொண்ட
களிராய் மனம்
புரவியோட்டமாய்
பழைய நினைவுகள்
தழும்பாய் காலத்தின்
நிகழ்வுகள்

மரநிழலாய்
மலர எண்ணி
குடைநிழலாய்
குறுகினேன்.

என்
மௌனம் கலைத்த
கவியே
இன்றும்
தொடருது தாயே
ஒரு
மௌனத்தின் மொழிபெயர்ப்பு......

Tuesday, April 17, 2007

மொழி

மொழிகளில்
சிறந்தது
மௌனமொழி
நீ
பேசுவதனால்......

Monday, April 9, 2007

வாழ்க்கை எனும் ஓடையில்

ஆதி முதல் அந்தம்
ஆதாயமின்றி
வாராது சொந்தம்,
அதனினும் மேடா
இறுதியில்
உடலேறிக்கும்
தீப்பந்தம்!
பெரியோர் போதனை
வாழ்வின் நிபந்தனை
சூழ்நிலையை சூழ்ந்துகொள்
சந்தர்ப்ப நிர்ப்பந்தம் அறி,
பரிகாசம் செய்தவனுக்கு
ஒரு இதிகாசமாய் இரு,

காதலில்
வீழாதே
சிரிப்பில் சீரழிந்து
சிந்தை சிறகொடிந்து
அவள் நினைவில்
மதியிழந்து
கண்ணீரில் நீ நனைவாய்,
தனிமையே இனிமை
வாழ்வின் வளமை
காதல் கொண்டால்
கற்பனை கட்டவிழும்,
கானல் நீர் கண்டு
முகம் கழுவ எண்ணாதே,
காதல் என்பதோர்
மணல்வீடு
அதனிடம்
ந்தாதே திருவோடு,

எவரையும்
நம்பாதே
உன்னை நேசி,
உள்ளுணர்வு கேள்
உணர்வில் மென்மை
உள்ளத்தில் உண்மை
கடைபிடி,
மூளையை சாணை பிடி
வெற்றியை எட்டிப்பிடி
பாவை மீது ஆசை வீடு
தேவைக்கு மீதம்
அள்ளிக்கொடு,

உடல்
சதை போர்த்திய ஓடு
மனிதன் ஆறறிவு
கொண்ட ஆடு,
ஆசை வந்தாடும்
மனதை துண்டாடும்
கடந்த கால தவறு
வாருங்கால
துயரின் திறவுகோல்
பெருமைக்கு
கொள்ளியிடு
பொறுமையின்
எல்லை தொடு,

இன்பத்து
க்கும்
இடைவெளி விடு
துன்பத்தையும்
தடவிக் கொடு
இயல்பே இன்பம்......
இன்பதுன்பமற்ற
நிலை எய்து.....
முன்மாதிரியாய் அல்ல
உன்மாதிரியாய் வாழ்
நிம்மதி நிறைந்தவை
கருவரை, கல்லறை
இடுகாட்டுக்கு
மட்டும் இறையாகு.....

Sunday, April 8, 2007

கவிதாஞ்சலி

இந்த கவிதை இறைவனடி சேர்ந்த எங்கள் தோழி கவிதாவுக்கு சமர்ப்பணம்.....""


ஏனடா இறைவா,

கைவிரல்களை
ஓடித்தாய்,
உடலில் பாய்ந்த
உதிரம் குடித்தாய்,
நட்பின்
பவித்திரம் சிதைத்தாய்,
மலரை
தீயிட்டு வதைத்தாய்,
செடிமேல்
அடைமழை பெய்தாய்,

அவள் மனம்
சுமந்த
கனவுகள் கோடி,
முடித்தாயே நீ
முகாரி பாடி,

உலகத்தில்
அவளோர் புள்ளி
ஏன் வைத்தாய்
அவளுக்கு கொள்ளி,

பிரித்தாயே என்
இரண்டாம் தாயை,
இனி என்
தோள்சாய நட்பேது,
விழிநீர்
துடைக்க விரலேது,

உயிர் தோழியே,
நட்பின்
கலியுக இலக்கணமே
க்க துடிக்கிறேன்
நானும் இக்கணமே,

காதலியை பிரிந்தாலும்
சுகித்திருப்பேன்,
தோழியை பிரித்தாய்
எப்படி சகித்திருப்பேன்,

என் துயர்
துடைப்பார் யாரடா,
இனி என்
வாழ்வே வீனடா,

மண்டியிடுகிறேன் இறைவா
நண்பர்களை பிரிக்காதே,
நீ வீசிய பாசக் கயிற்றால்
நட்பின் விழியில் விரிசல்....




Friday, March 2, 2007

பூமகள்

நீ
பூக்களை
கடக்கிறாய்

போராட்டம்
பூக்களுக்குள்
நீ பேசுவது
எவர் மொழியென்று......

Wednesday, February 14, 2007

*காதல் சுமைதாங்கி *

வருடங்கள்
விரைந்தும்
வதைக்குதடி
காதலை
சிதைத்த
பாவம்.....


என்
உணர்ச்சிகளின்
உன்னத
உருவகமே
உனை பிரிந்து
உயிர் கசிந்து
தன்னிலை இழந்து
மறுத
லிக்கிறேன்


அன்று
உனை சுமந்த
இதயப்பாசறை
இன்று
உன்
நினைவுக்
கல்லறை

இதழோடு
புதைந்த
புன்னகை
வராமல்
வற்றிய
வார்த்தைகள்
அலமாரியில்
உயிர் சுமக்கும்
கவிதைகள்

உயிரை
இரண்டாக்கி
உறைந்த
உன் நினைவுகள்


கற்பூரமாய்
காலம் கரைந்தும்
கசக்கும் நிஜமாய்
இன்று நம்
காதலின்
நினைவாஞ்சலி


வாழ்வில் நீ
வந்துபோன
நினைவால்
வெந்துபோகும்
இதயம்


இன்பதுன்பமற்ற
இந்நிலை
விதி வைத்த
சூனியமோ
காதல் பரிசளித்த
மானியமோ
நானறியேன்


இறைவா
எழுது
அவள்
எனக்கென்று
மறுபிறவியிலேனும்
....


பூத்திருப்பேன்
இமைமூடா

விழிகளுடன்
காதல்
சுமைதாங்கியாய்
.......................


இப்படிக்கு
உதிர்ந்தவன்
.....







புளகாங்கிதம்

என்
புதைகுழியில்
பூத்த
பூக்களை
பார்த்து
புன்னகைசெய்,

புளகாங்கிதம் கொள்வேன்
புரிந்துகொண்டாய்
என்
காதலை
என்று.....

நீ அறிவாயா

மலர்களுக்கு
முகவரி
தந்தவளே!
நீ
அறிவாயா,

நீ
கோலம்
போடுகையில்
ஒளிந்திருந்து
நிலவு
உன்னை ரசித்ததை

நீ
பேசுகையில்
உன் மொழியை
மலர்கள்
மனனம் செய்ததை......

Saturday, February 10, 2007

பிரிகிறேன்

பிரிகிறேன்
இன்று
உதிர்ந்த
இதழாக

மலரவேண்டி
என்றும்
உன்
இதழ்
புன்சிரிப்பாக.....

Friday, February 2, 2007

உன் காதல் .....

Thursday, February 1, 2007

கருவறை......

துடிக்கிறதே காதல் .....

விரக்தி .....

Monday, January 29, 2007

காதல் நதியே

என் நட்பு.....

நெஞ்சை நெறுடுதடி

"உனை பிரிந்து இத்தனை
வருடங்கள் ஆனபின்னும்,


நெஞ்சத்தை
நெறுடுதடி
நெருஞ்சிமுள்ளாய்
நினைவுகள்,

இன்றும் உனக்காக
நான் விடும்,

ஒரு
பெரு மூச்சு,

இரண்டு சொட்டு
கண்ணீர்,

மும்மத கடவுளிடமும்
உனக்காய் வேண்டுதல்,

நான்கு திசைகளிலும்
உன் பிம்பங்களாக,

ஐந்து பூதங்களும்
எனக்கு நீயாக,

ஆறுகால பூஜை
செய்கிறேன் உனக்காக,

ஏழு ஜென்மங்கள்
எடுத்தாலும்,

எட்டு வருடங்கள்
நான்
காதலித்த உன்னை,

ஒன்பது கிரகங்கள்
தாண்டி
நீ இருந்தாலும்,

கிரகத்திர்க்கு ஒரு
அவதாரமாய் எடுத்து,

தசாவதாரத்தில்
சேர்வோம் நாம்"
.


Tuesday, January 23, 2007

உள்ளே செல்

மன்னித்து விடு தாயே

Monday, January 22, 2007

நிலா சோறு

எழுத்தாணி

வெட்கம்

Saturday, January 20, 2007

என் நிலவு

உன் புன்னகையின் மஹிமை

நிழல்

Friday, January 19, 2007

இறைவனுக்கு நன்ற ( இது கவிதை அல்ல)

இறைவா,

நீ இருக்கிறாயோ இல்லையோ நான் அறியேன்,
என் எண்ணங்களை கடவுளாக மதிப்பவன் நான்,

நான்
நம்பும் மந்திரம்,

"நம்பினார்
கெடுவதில்லை"
"நீ வாழ பிறரை கெடுக்காதே".

இந்த வாழ்க்கையை அருளியமைக்கு நன்றி......

Thursday, January 18, 2007

காத்து நிற்கிறேன்

வருந்தாதே.....

Monday, January 15, 2007

காதல் போயின் சாதல்


காத்திருப்பேன்


வலிக்கிறதாம்


காத்திருப்பு


Sunday, January 14, 2007

Malar


Wednesday, January 10, 2007

Sammadham dhanadi


Kaathiruppu

உனக்காய்
கால் கடுக்க
காத்திருந்து,
வந்தபின் சினம் கொண்டு,
திட்ட முற்பட,

தலை தாழ்த்தி,
இமை உயர்த்தி

"என்னடா செல்லம் கோவமா"
என்பாயே,
அந்த சிரிப்பில்
சிதையுதடி
என் சினமெல்லாம்.

"காதல் போயின் சாதல்"

என் மீதான

உன் காதலை

நீ உரைத்த விதம்,


நான் திரி,

நீ மெழுகு

நான் எரிய

நீ உருக,


வாழ்வோம் என்றாயே,

இதுவன்றோ

"காதல் போயின் சாதல்."

காத்திருப்பு......

ஜென்மங்கள் ஆனாலும்
எனக்காக
காத்திருப்பாயா
என்றாய்
அன்று,

அதன் பொருள்
அறிந்தேன்
உன்
திருமண அழைப்பிதழ்
தந்தபோது
இன்று.

Monday, January 8, 2007

நிலவு

நிலவில் முதன் முதலில்
காலடி வைத்தவனின் பெயர்,
ஆர்ம்ஸ்ட்ராங்,

முதன் முதலில்
நிலவு என்னுள்
காலடி வைத்தது,

அப்போ என் பெயர்?

பேனா முள்

இரு மனங்களை பிரித்து,
நான்கு மனங்களை கசக்கிய உன்
தந்தையை என்ன சொல்லி திட்ட,

தண்டனை விதித்தவன் ஒருவன்
பெற்றவன் ஒருவன்
இடையில் பேனா முள்ளாய் நான்.



குறிப்பு:-
நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை மனம் முடித்து, பின்னர் எந்தன் காதல் பற்றி அவள் அறிய நேர்ந்தால் அவள் உள்ளம் எப்படி வெதும்பும் என்று நினைத்து எழுதினேன்,

பேனா முள்---> Judge is giving death penalty to the criminal but he damages that pen nib(it knows nothing). so i thought of my wife's state as of then as like that pen.

கவிஞன்

கவிஞன்,
இரண்டாம் கடவுள்,
இயற்கைக்கு அப்பாற்பட்டவன்,

படைத்தவன் இறைவன்
உரைத்தவன் கவிஞன்
எண்ணங்களை தாரை வார்க்கும்
பதவியில்லா பத்திரிக்கைக்காரன்,

சம்மதம் தானடி

எனக்கு சம்மதம் தானடி,
நீ மலராக இருப்பின்,
உன்னை தாங்கும் காம்பாய்
இருக்க மட்டுமல்ல,

நீ உதிர்ந்த
இதழாய் இருப்பினும்,
மண்போல் உன்னை

என்னுள்
புதைத்துக்கொள்ளவும்.

மலர்

மலர்கள் உறங்குவதை
கண்டதில்லையாம் எவரும்,
யார் சொன்னது,
நான் கண்டதுண்டு
நீ
உறங்கும்போது.