Posts

Showing posts from 2007

மறுபிறவி

மறுபிற வி கிடைத்தா ல் எனக் கு புன்ன கை யா ய் பிறந் து மொழியாவே ன் உனக் கு.....

கவிதை

உன் விழியும் என் விரலும் சேர காலத்தால் அழியா காதல் சின்னங்களாய் பெற்றெடுத்த செல்வங்கள் .....

விலகல்.

விளக த்தான் விழைகின்றேன் விளக முடியாமல் விழுகிறேன் உன் விழியீர்ப்பு விசையில் விளக்கில் விழும் வி ட்டில் பூச்சியாய்

நீ மட்டும் வாசிக்க.....

இமைகளுக்கிடையில் இருந்து நீ எனை இம்சிக்க, உனை நான் சுவாசிக்க என் இதயக்குழியில் நீ வசிக்க, சூழ்நிலையோடு சூழ்ச்சியும் சூழ நம் காதல் கசக்க, உனக்கு தோழனானேன் நான் மனம் வலிக்க, உனையன்றி வேறு துணையில்லை என் துயர் உரைக்க, இடுகாட்டுக்கு இ ரை யாவேன் இரண்டு சொட்டு இறைத்திடு கண்ணீர் உன் இரங்கல் தெரிவிக்க, காதலே காதல் கொள்ளும டி நம் காதல் மீது தன் நிலை சிறக்க.....

விதி

உயிர்க்கொண்டு வாழும் நாள்வரை உன் துணைகொண்டு வாழ ஏங்கிணேன், விதித்ததென்னவோ மலர்கொண்டு வைக்கத்தான் உன் கல்லறையில் .....

கடவுளாக்குவோம்.....

விடையறியாமல் விசும்பு தடி விழிநீர் விதைத் து விலை மதிப்பற்ற காதல் விரைந் தோ டி வா விதியால் விதவையாகும் முன் விழுதாய் வளர்த்த நம் காதலை கடவுளாக்குவோம் நாம் கைகோர்த்து ......

***காதல் பரிசு***

எனை பிரிந்து வேறொருவனை நீ மனமுவந்ததாய் மணக்க , காதல் மருந்தெனக்கு உன் திருமண விருந்து.......

*** தொடரும் என் காதல்***

சம்மதம் எனக்கு மரணித்து மீண்டும் ஜனித்து அடக்கம்வரை நடக்க காதல் கைப்பிடித்து அவள் மழலையாய் .....

***தினம் ஒரு கவிதை***

அறியாதவளாய் கேட்கிறாய் தினம் ஒரு கவிதைக்கு காரணம் நாளுக்கொன்றாய் புது பரிணாமததில் தோன்றுவது நீயென்பதறியாமல்.....

அசைபோடுகிறேன்.....

அசைபோடுகிறேன் ..... இதயத்தை அபகரித்த நீயும் உனில் அகப்பட்ட நானும் நெஞ்சில் காதலை விதைத்த நாள் முதல் சிதைபட்ட நாள் வரை யிலான அ சையா ச் சொ த்தாம் நினைவுகளை உன் நினைவு எழ மௌனமாய் நெஞ்சுக்குள் நான் அழ இதயத்துள் உன் புன்னகை சொற்பொழிவு என் மூலாதாரமே , தராசு முள்ளாய் துடிக்கு தடி இதயம்

ஒரு மௌனத்தின் மொழிபெயர்ப்பு......

அருமை காதலியே இதய வார்ப்பே இயங்கு சக்தியே காதல் நினைவெனை கொல்ல என் உருக்கத்தை யாரிடம் சொல்ல எனக்காக அல்ல காதல் கொண்ட துயர் தள்ள மதம் கொண்ட களிராய் மனம் புரவியோட்டமாய் பழைய நினைவுகள் தழும்பாய் காலத்தின் நிகழ்வுகள் மரநிழலாய் மலர எண்ணி குடைநிழலாய் குறுகினேன். என் மௌனம் கலைத்த கவியே இன்றும் தொடருது தாயே ஒரு மௌனத்தின் மொழிபெயர்ப்பு......

மொழி

மொழிகளில் சிறந்தது மௌனமொழி நீ பேசுவதனால்......

வாழ்க்கை எனும் ஓடையில்

ஆதி முதல் அந்தம் ஆதாய மின்றி வாராது சொந்தம், அதனினும் மே ல டா இறுதியில் உடலேறிக்கும் தீப் பந்தம்! பெரியோர் போதனை வாழ்வின் நிபந்தனை சூழ்நிலையை சூழ்ந் து கொள் சந்தர்ப்ப நிர்ப்பந்தம் அறி , பரிகாசம் செய்தவனுக்கு ஒரு இதிகாசமாய் இரு , காதலில் வீழாதே சிரிப்பில் சீரழிந்து சிந்தை சிறகொடிந்து அவள் நினைவில் மதியிழந்து கண்ணீரில் நீ நனைவாய், தனிமையே இனிமை வாழ்வின் வளமை காதல் கொண்டால் கற்பனை கட்டவிழும், கானல் நீர் கண்டு முகம் கழுவ எண்ணாதே, காதல் என்பதோர் மண ல் வீடு அதனிடம் ஏ ந் தாதே திரு வோ டு, எவரையும் நம்பாதே உன்னை நேசி, உள்ளுணர்வு கேள் உணர்வில் மெ ன்மை உள்ளத்தில் உண்மை கடைபிடி, மூளையை சாணை பிடி வெற்றியை எட்டிப்பிடி பாவை மீது ஆசை வீடு தேவைக்கு மீதம் அள்ளிக்கொடு, உடல் சதை போர்த்திய ஓடு மனிதன் ஆறறி வு கொண்ட ஆடு, ஆசை வந்தாடும் மனதை துண்டாடும் கடந்த கால தவறு வாருங்கால துயரின் திறவுகோல் பெருமைக்கு கொ ள் ளியிடு பொறுமையின் எல்லை தொ டு, இன்பத்து க்கும் இடைவெளி வி டு துன்பத்தையும் தடவி க் ...

கவிதாஞ்சலி

இந்த கவிதை இறைவனடி சேர்ந்த எங்கள் தோழி கவிதாவுக்கு சமர்ப்பணம்....."" ஏனடா இறைவா , கைவிரல்களை ஓடித்தாய் , உடலில் பாய்ந்த உதிரம் குடித்தாய் , நட்பின் பவித்திரம் சிதைத்தாய் , மலரை தீயிட்டு வதைத்தாய் , செடிமேல் அடைமழை பெய்தாய் , அவள் மனம் சுமந்த கனவுகள் கோடி , முடித்தாயே நீ முகாரி பாடி , உலகத்தில் அவளோ ர் புள்ளி ஏன் வைத்தாய் அவளுக்கு கொ ள்ளி , பிரித்தாயே என் இரண்டாம் தாயை , இனி என் தோள்சாய நட்பேது , விழிநீர் துடைக்க விரலேது , உயிர் தோழியே , நட்பின் கலியுக இலக்கணமே இ ற க்க துடிக்கிறேன் நானும் இக்கணமே , காதலியை பிரிந்தாலும் சுகித்திருப்பேன் , தோழியை பிரித்தாய் எப்படி சகித்திருப்பேன் , என் துயர் துடைப்பார் யாரடா , இனி என் வாழ்வே வீனடா , மண்டியிடுகிறேன் இறைவா நண்பர்களை பிரிக்காதே , நீ வீசிய பாசக் கயிற்றால் நட்பின் விழியில் விரிசல் ....

பூமகள்

நீ பூக்களை கடக்கிறாய் போராட்டம் பூக்களுக்குள் நீ பேசுவது எவர் மொழியென்று......

*காதல் சுமைதாங்கி *

வருடங்கள் விரைந்தும் வதைக்குதடி காதலை சிதைத்த பாவம்..... என் உணர்ச்சிகளின் உன்னத உருவகமே உனை பிரிந்து உயிர் கசிந்து தன்னிலை இழந்து மறுத லி க்கிறேன் அன்று உனை சுமந்த இதயப்பாசறை இன்று உன் நினைவுக் கல்லறை இதழோடு புதைந்த புன்னகை வராமல் வற்றிய வார்த்தைகள் அலமாரியில் உயிர் சுமக்கும் கவிதைகள் உயிரை இரண்டாக்கி உறைந்த உன் நினைவுகள் கற்பூரமாய் காலம் கரைந்தும் கசக்கும் நிஜமாய் இன்று நம் காதலின் நினைவாஞ்சலி வாழ்வில் நீ வந்துபோன நினைவால் வெந்துபோகும் இதயம் இன்பதுன்பமற்ற இந்நிலை விதி வைத்த சூனியமோ காதல் பரிசளித்த மானியமோ நானறியேன் இறைவா எழுது அவள் எனக்கென்று மறுபிறவியிலேனும் ... . பூத்திருப்பேன் இமைமூடா விழிகளுடன் காதல் சுமைதாங்கியாய் ...................... . இப்படிக்கு உதிர்ந்தவன் .... .