Posts

Showing posts from February, 2007

*காதல் சுமைதாங்கி *

வருடங்கள் விரைந்தும் வதைக்குதடி காதலை சிதைத்த பாவம்..... என் உணர்ச்சிகளின் உன்னத உருவகமே உனை பிரிந்து உயிர் கசிந்து தன்னிலை இழந்து மறுத லி க்கிறேன் அன்று உனை சுமந்த இதயப்பாசறை இன்று உன் நினைவுக் கல்லறை இதழோடு புதைந்த புன்னகை வராமல் வற்றிய வார்த்தைகள் அலமாரியில் உயிர் சுமக்கும் கவிதைகள் உயிரை இரண்டாக்கி உறைந்த உன் நினைவுகள் கற்பூரமாய் காலம் கரைந்தும் கசக்கும் நிஜமாய் இன்று நம் காதலின் நினைவாஞ்சலி வாழ்வில் நீ வந்துபோன நினைவால் வெந்துபோகும் இதயம் இன்பதுன்பமற்ற இந்நிலை விதி வைத்த சூனியமோ காதல் பரிசளித்த மானியமோ நானறியேன் இறைவா எழுது அவள் எனக்கென்று மறுபிறவியிலேனும் ... . பூத்திருப்பேன் இமைமூடா விழிகளுடன் காதல் சுமைதாங்கியாய் ...................... . இப்படிக்கு உதிர்ந்தவன் .... .

புளகாங்கிதம்

என் புதைகுழியில் பூத்த பூக்களை பார்த்து புன்னகைசெய், புளகாங்கிதம் கொள்வேன் புரிந்துகொண்டாய் என் காதலை என்று .....

நீ அறிவாயா

மலர்களுக்கு முகவரி தந்த வளே ! நீ அறிவாயா , நீ கோலம் போ டு கையில் ஒளிந்திருந்து நிலவு உன்னை ரசி த் ததை நீ பேசுகையில் உன் மொழியை மலர்கள் மனனம் செய்ததை......

பிரிகிறேன்

பிரிகிறேன் இன்று உதிர்ந்த இதழாக மலரவேண்டி என்றும் உன் இதழ் புன்சிரிப்பாக.....

உன் காதல் .....

Image

கருவறை......

Image

துடிக்கிறதே காதல் .....

Image

விரக்தி .....

Image