Posts

Showing posts from January 8, 2007

நிலவு

நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவனின் பெயர், ஆர்ம்ஸ்ட்ராங், முதன் முதலில் நிலவு என்னுள் காலடி வைத்தது, அப்போ என் பெயர்?

பேனா முள்

இரு மனங்களை பிரித்து, நான்கு மனங்களை கசக்கிய உன் தந்தையை என்ன சொல்லி திட்ட, தண்டனை விதித்தவன் ஒருவன் பெற்றவன் ஒருவன் இடையில் பேனா முள்ளாய் நான். குறிப்பு:- நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை மனம் முடித்து, பின்னர் எந்தன் காதல் பற்றி அவள் அறிய நேர்ந்தால் அவள் உள்ளம் எப்படி வெதும்பும் என்று நினைத்து எழுதினேன், பேனா முள் ---> Judge is giving death penalty to the criminal but he damages that pen nib(it knows nothing). so i thought of my wife's state as of then as like that pen.

கவிஞன்

கவிஞன், இரண்டாம் கடவுள், இயற்கைக்கு அப்பாற்பட்டவன், படைத்தவன் இறைவன் உரைத்தவன் கவிஞன் எண்ணங்களை தாரை வார்க்கும் பதவியில்லா பத்திரிக்கைக்காரன்,

சம்மதம் தானடி

எனக்கு சம்மதம் தானடி, நீ மலராக இருப்பின், உன்னை தாங்கும் காம்பாய் இருக்க மட்டுமல்ல, நீ உதிர்ந்த இதழாய் இருப்பினும், மண்போல் உன்னை என்னுள் புதைத்துக்கொள்ளவும்.

மலர்

மலர்கள் உறங்குவதை கண்டதில்லையாம் எவரும், யார் சொன்னது, நான் கண்டதுண்டு நீ உறங்கும்போது.