வாழ்க்கை எனும் ஓடையில்
ஆதி முதல் அந்தம் ஆதாய மின்றி வாராது சொந்தம், அதனினும் மே ல டா இறுதியில் உடலேறிக்கும் தீப் பந்தம்! பெரியோர் போதனை வாழ்வின் நிபந்தனை சூழ்நிலையை சூழ்ந் து கொள் சந்தர்ப்ப நிர்ப்பந்தம் அறி , பரிகாசம் செய்தவனுக்கு ஒரு இதிகாசமாய் இரு , காதலில் வீழாதே சிரிப்பில் சீரழிந்து சிந்தை சிறகொடிந்து அவள் நினைவில் மதியிழந்து கண்ணீரில் நீ நனைவாய், தனிமையே இனிமை வாழ்வின் வளமை காதல் கொண்டால் கற்பனை கட்டவிழும், கானல் நீர் கண்டு முகம் கழுவ எண்ணாதே, காதல் என்பதோர் மண ல் வீடு அதனிடம் ஏ ந் தாதே திரு வோ டு, எவரையும் நம்பாதே உன்னை நேசி, உள்ளுணர்வு கேள் உணர்வில் மெ ன்மை உள்ளத்தில் உண்மை கடைபிடி, மூளையை சாணை பிடி வெற்றியை எட்டிப்பிடி பாவை மீது ஆசை வீடு தேவைக்கு மீதம் அள்ளிக்கொடு, உடல் சதை போர்த்திய ஓடு மனிதன் ஆறறி வு கொண்ட ஆடு, ஆசை வந்தாடும் மனதை துண்டாடும் கடந்த கால தவறு வாருங்கால துயரின் திறவுகோல் பெருமைக்கு கொ ள் ளியிடு பொறுமையின் எல்லை தொ டு, இன்பத்து க்கும் இடைவெளி வி டு துன்பத்தையும் தடவி க் ...