T.Rajendar பாணியில் ஒரு காதல் கவிதை

உனை கண்டபோது முதல் முதலாய்
என் நெஞ்சில் காதல் கடல் அலை யாய்
நான் ஆனேன் கற்சிலையாய்
பிறகு நான் இல்லை நிலையாய்
என்றும் உன் நினைவாய்
உனை தொடர்ந்தேன் நிழலாய்
உடல் இளைத்தேன் துறும்பாய்
என் காதல் சொன்னேன் ஒரு வழியாய்

மலர்ந்தது உன் திருவாய்
எனை கண்டு புன்னகைத்தாய் குறும்பாய்
ஆலமரத்தின் அழகிய விழுதாய்
காதல் வளர்த்தோம் மெல்ல வளர்பிறையாய்
காலங்கள் கரைய மெழுகாய்
வீட்டில் காதல் சொன்னோம் கனிவாய்

அவர்கள்

முகம் சுளிக்க வெகுவாய்
பிறகு யோசிக்க மெதுவாய்
நாம்

உறுகினோம் தீ பட்ட மெழுகாய்
துடித்தோம் தீயில் விழுந்த புழுவாய்
சம்மதம் தந்தனர் அமிழ்தாய்
இதயம் ஆனது தேனில் விழுந்த பலாசுளையாய்
என்றும் வாழ்வோம் வா நிறைவாய்…..

Comments

Popular posts from this blog

நிலவு

கவிதை